நிலச்சரிவில் 7 பேர் உயிரிழப்பு: ‘ஓ மை காட்’ நடிகர் ரஜினிகாந்த் வருத்தம்

4 months ago 14

சென்னை: கூலி திரைப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் நடக்கவுள்ள நிலையில், அதில் பங்கேற்க, நடிகர் ரஜினிகாந்த் நேற்று காலை இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் மூலம் ஜெய்ப்பூர் செல்வதற்காக, சென்னை விமான நிலையம் வந்தார். சென்னை விமான நிலையம் வந்த நடிகர் ரஜினி காந்த்துக்கு, அவரது ரசிகர்கள், விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு புத்தகத்தை வழங்கி, அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தனர். அவர்களுக்கு நன்றி தெரிவித்தார். இதை தொடர்ந்து ரஜினிகாந்திடம் செய்தியாளர்கள், திருவண்ணாமலையில் நிலச்சரிவில் 7 பேர் உயிரிழந்தது குறித்து கேள்வி எழுப்பியதற்கு, அவர் ‘ஓ மை காட்’ என்று வருத்தம் தெரிவித்து விட்டு, விமான நிலையத்திற்குள் சென்றார்.

The post நிலச்சரிவில் 7 பேர் உயிரிழப்பு: ‘ஓ மை காட்’ நடிகர் ரஜினிகாந்த் வருத்தம் appeared first on Dinakaran.

Read Entire Article