நியூமரோஸ் மோட்டார்ஸ் நிறுவனம், டிப்லோஸ் மேக்ஸ், டிப்லோஸ் புரோ மற்றும் டிப்ளோஸ் ஐ-புரோ ஆகிய புதிய வேரியண்ட்களை டெல்லியில் நடைபெற உள்ள பாரத் மொபிலிடி எக்ஸ்போவில் காட்சிப்படுத்த உள்ளது. டூயல் டிஸ்க் பிளேக்குகள், எல்டிஇ லைட், திருட்டு எச்சரிக்கை, வாகன கண்காணிப்பு உள்ளிட்ட மேம்பட்ட அம்சங்கள் இதில் உள்ளன. இந்த ஸ்கூட்டர்கள் 1.39 கிலோ மீட்டர் தூரம் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டுள்ளதாக இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. வரும் 17ம் தேதி இவற்றுக்கான முன்பதிவு தொடங்கும் எனவும், அடுத்த 5 ஆண்டுகளில் 2.5 லட்சம் வாகனங்கள் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் நியூமரோஸ் மோட்டார்ஸ் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ஷ்ரேயஸ் ஷிபுலால் தெரிவித்துள்ளார்.
The post நியூமெரோஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் appeared first on Dinakaran.