நியூசிலாந்துக்கு எதிரான தோல்விக்கு காரணம் என்ன ? ரோகித் சர்மா விளக்கம்

3 months ago 20

பெங்களூரு,

இந்தியாவுக்கு வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்டடெஸ்ட்,  தொடரில் ஆடி வருகிறது. இதன்படி இந்தியா- நியூசிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்தது. மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் டாஸ் கூட போடப்படாமல் கைவிடப்பட்டது. 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.முதலில் பேட்டிங் செய்த இந்தியா தனது முதல் இன்னிங்சில் 46 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து 402 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து தரப்பில் ரச்சின் ரவீந்திரா 134 ரன், கான்வே 91 ரன், டிம் சவுதி 65 ரன் எடுத்தனர். இதையடுத்து 366 ரன்கள் பின்னிலையுடன் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா 462 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதில் அபாரமாக ஆடிய சர்பராஸ் கான் 150 ரன்னிலும், ரிஷப் பண்ட் 99 ரன்னிலும் அவுட் ஆகினர்.

இதன் காரணமாக 107 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து தனது 2வது இன்னிங்சை தொடங்கியது.ஜஸ்ப்ரீத் பும்ரா 4 பந்துகள் வீசிய நிலையில், போதிய வெளிச்சமின்மை காரணமாக நேற்று 4ம் நாள் ஆட்டம் முடிக்கப்பட்டது.

5வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது .மழை காரணமாக ஆட்டம் தாமதமாக தொடங்கியது . தொடக்கத்தில் டாம் லாதம் ரன் எதுவும் எடுக்காமல் பும்ரா பந்துவீச்ச்சில் ஆட்டமிழந்தார். பின்னர் டெவான் கான்வே 17 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து வில் ய்ங் , ரச்சின் ரவீந்திரா இருவரும் இணைந்து சிறப்பாக விளையாடினர் . இதனால் நியூசிலாந்து அணி 27.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்க்கு 107 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது .

இந்த வெற்றியால் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என நியூசிலாந்து அணி முன்னிலை பெற்றுள்ளது. 2வது டெஸ்ட் வரும் 26ம் தேதி தொடங்க உள்ளது. இந்த நிலையில் தோல்வி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது,

முதல் இன்னிங்சில் நாங்கள் சரியாக பேட்டிங் செய்யவில்லை. நாங்கள் 46 ரன்களுக்கு ஆல் அவுட் ஆவோம் என்று எதிர்பார்க்கவில்லை. இருப்பினும் இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டோம் இது ஒரு நல்ல முயற்சி. 350 ரன்கள் பின்தங்கியிருக்கும் போது,அதிகம் யோசிக்க முடியாது. ரிஷப் பண்ட் மற்றும் சர்பராஸ் கான் ஆகியோரின் பேட்டிங்கை பார்க்க மிகவும் உற்சாகமாக இருந்தது.

நியூசிலாந்து அணி நன்றாகப் பந்துவீசியது, அதற்கு நாங்கள் பதிலளிக்கத் தவறிவிட்டோம். நாங்கள் மீண்டு வருவோம் . என தெரிவித்தார் 

Read Entire Article