நியூசிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட்: ஆடும் அணியை அறிவித்த இங்கிலாந்து

6 months ago 22

ஹாமில்டன்,

இங்கிலாந்து கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் 2 போட்டிகளிலேயே இங்கிலாந்து தொடரை கைப்பற்றி விட்டது.

இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி போட்டி நாளை இந்திய நேரப்படி அதிகாலை 3.30 மணியளவில் தொடங்க உள்ளது.

இந்நிலையில் இந்த போட்டிக்கான ஆடும் அணியை (பிளேயிங் 11) இங்கிலாந்து அறிவித்துள்ளது. அணியில் ஒரே மாற்றமாக கடந்த போட்டியில் விளையாடிய கிறிஸ் வோக்சுக்கு பதிலாக மேத்யூ பாட்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து அணியின் பிளேயிங் 11 பின்வருமாறு:-

ஜாக் கிராலி, பென் டக்கெட், ஜேக்கம் பெத்தேல், ஜோ ரூட், ஹாரி புரூக், ஒல்லி போப், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), கஸ் அட்கின்சன், மேத்யூ பாட்ஸ், பிரைடன் கார்ஸ் மற்றும் ஷோயப் பஷீர்

As England name their Hamilton #NZvENG Test XI, mystery surrounds the hosts' selection and a potential career swansong More from #WTC25 https://t.co/S3tXlGAhDi

— ICC (@ICC) December 13, 2024
Read Entire Article