நியூசியுடன் கடைசி ஓடிஐ இலங்கை ஆறுதல் வெற்றி

2 hours ago 4

ஆக்லாந்து: நியூசிலாந்து சென்றுள்ள இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடியது. முதல் இரு போட்டிகளில் நியூசி வென்ற நிலையில், 3வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி நேற்று ஆக்லாந்தில் தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை முதலில் களமிறங்கி 8 விக்கெட் இழப்புக்கு 290 ரன் குவித்தது.

நியூசியின் மேட் ஹென்றி 4, கேப்டன் மிட்செல் சான்ட்னர் 2 விக்கெட் எடுத்தனர். பின், 291ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசி 29.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 150 ரன்னில் சுருண்டது. அதனால் இலங்கை 140 ரன்னில் அபார வெற்றி பெற்றது. இதையடுத்து, ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் நியூசி கைப்பற்றியது. 3 விக்கெட் வீழ்த்திய இலங்கையின் அஸிதா பெர்னாண்டோ ஆட்ட நாயகன்.

The post நியூசியுடன் கடைசி ஓடிஐ இலங்கை ஆறுதல் வெற்றி appeared first on Dinakaran.

Read Entire Article