நியாயவிலை கடைகளில் துவரம் பருப்பு தடையின்றி வழங்க ராமதாஸ் கோரிக்கை 

1 month ago 5

சென்னை: பாமக நிறு​வனர் ராமதாஸ் நேற்று தனது எக்ஸ் வலைதளப் பதிவில் கூறி​யிருப்​ப​தாவது: நவம்பர் மாதம் தொடங்கி 22 நாட்கள் ஆகிவிட்ட நிலை​யில், பல நியாய​விலைக் கடைகளுக்கு வெறும் 200 கிலோ துவரம் பருப்பு மட்டுமே வழங்​கப்​பட்​ட​தாக​வும், பெரும்​பாலான கடைகளுக்கு துவரம் பருப்பே வழங்​கப்​பட​வில்லை என்றும் கூறப்​படு​கிறது.

கடந்த சில மாதங்​களாகவே நியாய​விலைக்​கடைகளில் துவரம் பருப்பு முறையாக வழங்​கப்​படாத​தால் கடந்த ஜூன் மாதத்​தில் ரூ.180 ஆக இருந்த ஒரு கிலோ துவரம் பருப்​பின் விலை இப்போது ரூ.210 ஆக உயர்ந்​திருக்​கிறது.

Read Entire Article