நியாய விலைக்கடை மாஜி ஊழியர் தர்ணா

2 weeks ago 2

விருத்தாசலம், ஜன. 23: விருத்தாசலம் நகரம் சக்தி நகரை சேர்ந்தவர் நளமகராஜன். இவர் கடந்த 2009ம் ஆண்டு திட்டக்குடி பகுதியில் உள்ள நியாய விலைக் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது அவருடன் மகளிர் நியாய விலைக் கடையில் பணிபுரிந்த சாந்தி என்பவர் நளமகாராஜன் மீது சில புகாரை நிர்வாகத்துக்கு கூறியதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் அவர் பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார். இதனிடையே சாந்தி என்பவர் 10ம் வகுப்பு படிக்காமலேயே, படித்ததாக போலி ஆவணம் பெற்று வேலை வாங்கியதாக கூறி விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு நேற்று திடீரென தர்ணாவில் ஈடுபட்டார். அவரிடம் பேச்சுவார்த்தை நடத்திய கோட்டாட்சியர் அலுவலக அதிகாரிகள் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக கூறியதன்பேரில் அவர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றார். இதனால் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.

The post நியாய விலைக்கடை மாஜி ஊழியர் தர்ணா appeared first on Dinakaran.

Read Entire Article