நியர் பை

3 months ago 14

பண்டிகைகள் என்றாலே சலுகைகள் மற்றும் கிப்ட் கூப்பன்கள்தான். நிறைய கடைகள் நேரடியாக சலுகைகள் , கூப்பன்கள் கொடுத்தாலும் எல்லா ஆஃபர்களும் , கிப்ட் கூப்பன்களும் நம் கண்களில் தென்படுவதில்லை. அதற்கு தான் பயன்படுகிறது இந்த ‘ நியர் பை ’ செயலி ( Near Buy) உங்களுக்கு மிக அருகில் இருக்கும் சலூன், பார்லர், ஹோட்டல்கள், வீட்டு பராமரிப்பு சேவைகள், மருத்துவம், மால்கள், பார்ட்டிகள் என எங்கே எல்லாம் உங்கள் பகுதிகளில் சலுகைகள் மற்றும் சிறப்பு கூப்பன்கள், சிறப்பு நிகழ்ச்சிகள் உள்ளனவோ அத்தனையும் இந்த செயலியில் பெறலாம். உதாரணத்திற்கு நீங்கள் ஒரு பார்லர் சேவை பெற வேண்டும் எனில் குறிப்பிட்ட கிப்ட் கூப்பன்களை வாங்கிக் கொள்வதன் மூலம் நீங்கள் பெற நினைக்கும் சேவைகளுக்கு அதிகபட்ச சலுகைகளையும் அந்த கூப்பன்கள் கொடுக்கும். ஒரு சில கூப்பன்கள் மூலமாக ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் துவங்கி பல ஆஃபர்களை பெறலாம். பண்டிகை காலம் என்பதால் வீட்டிற்கு தேவையான பலசரக்கு மளிகை பொருட்கள் வாங்க வேண்டிய அவசியம் கூட இருக்கும். இதற்கும் அருகாமையில் இருக்கும் சூப்பர் மார்க்கெட்களில் ஏதேனும் சிறப்பு சலுகைகள் இருக்கின்றனவா எனவும் இந்தச் செயலியில் பார்த்துக் கொள்ளலாம்.

The post நியர் பை appeared first on Dinakaran.

Read Entire Article