பாட்னா: பீகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. முதல்வராக நிதிஷ் குமார் ஆட்சியை நடத்தி வருகிறார். முதல்வர் நிதிஷ் குமாரின் மகன் நிஷாந்த் குமார். அவரிடம் நிருபர்கள், ‘நேரடி அரசியலில் இறங்குவீர்களா?’ என்று கேட்டனர். அதற்கு அவர் எவ்வித பதிலும் அளிக்காமல் அங்கிருந்து சென்றுவிட்டார்.
இதுகுறித்து தேஜஸ்வியாதவ் கூறுகையில்,’பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் மகன் நிஷாந்த் அரசியலுக்கு வந்தால், ஐக்கிய ஜனதாதளம் கட்சியை பாஜ மற்றும் பிற கூட்டணி கட்சிகளிடம் இருந்து காப்பாற்றி விடுவார். நிஷாந்த் எனக்கு ஒரு சகோதரன் போன்றவர். அவர்வந்தால் அவரது கட்சிக்கு புதிய புத்துணர்ச்சியை அளிக்கும்’ என்றார்.
The post நிதிஷ் குமாரின் மகன் அரசியலில் குதிக்கிறாரா? appeared first on Dinakaran.