நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு

4 months ago 32

பெங்களூரு,

நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு எதிராக பெங்களூரு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஜனாதிகாரா சங்கர்ஷ பரிஷத் அமைப்பின் துணைத்தலைவர் ஆதர்ஷ் ஐயர் மனுதாக்கல் செய்தார். அவரது மனுவில்,"நிர்மலா சீதாராமன், ஜெ.பி.நட்டா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிமன்றம், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட்டது. இதன் அடிப்படையில் நிர்மலா சீதாராமன், ஜே.பி.நட்டா, கர்நாடக முன்னாள் பாஜக தலைவர் நளின் குமார், கர்நாடக பாஜக தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது பெங்களூரு திலக் நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  

Read Entire Article