நிச்சயதார்த்தத்திற்கு பின் முதல் முறையாக சோபிதா துலிபாலாவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த நாக சைதன்யா

3 months ago 20

ஐதராபாத்,

தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும், நடிகருமான நாக சைதன்யா தெலுங்கில் ஏ மாயா சேசாவே, மனம், லவ் ஸ்டோரி, மஜிலி உள்ளிட்ட பல படங்களில் நடித்துப் பிரபலமானார். இவர் கடந்த 2017-ம் ஆண்டு நடிகை சமந்தாவை திருமணம் செய்து கொண்டார். பின்னர் இருவரும் கடந்த 2021-ம் ஆண்டு பிரிவதாக அறிவித்து விவாகரத்து பெற்றுகொண்டனர்.

அதன் பிறகு நடிகர் நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவை காதலிப்பதாக தகவல் பரவியநிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. இது குறித்தான புகைப்படங்களை நடிகர் நாகார்ஜுனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

இதனையடுத்து, இருவரும் ஒன்றாக எந்த புகைப்படத்தையும் பகிராதநிலையில், முதல் முறையாக நிச்சயதார்த்தத்திற்கு பிறகு சோபிதா துலிபாலாவுடன் இருக்கும் புகைப்படத்தை நாக சைதன்யா பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தமிழில் 'பொன்னியின் செல்வன்' படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் சோபிதா துலிபாலா. மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.'மங்கி மேன்' என்ற இந்தி படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article