நாளை வெளியாகும் 'அமரன்' படத்தின் 'உயிரே' பாடல்

2 months ago 14

சென்னை,

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'அமரன்'. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். புவன் அரோரா, சுரேஷ் சக்கரவர்த்தி, ஸ்ரீகுமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

இப்படம் மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை கதையாக கொண்டுள்ளது. மேலும் இப்படம் வரும் தீபாவளி அன்று 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மேலும் இப்படத்திற்கான புரமோஷன் நிகழ்ச்சிகளில் கடந்த சில நாட்களாகவே படக் குழு கலந்து வருகிறது.

சமீபத்தில் இந்த படத்தின் 'ஹே மின்னலே' என்ற முதல் பாடல் வெளியானது. இந்த பாடல் இதுவரை 16 மில்லியன் பார்வைகளை கடந்து இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் தற்போது இப்படத்தின் அடுத்த பாடல் குறித்த அப்டேட் ஒன்றை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் வெளியிட்டுள்ளார். அதில் 'உயிரே' என்ற பாடல் நாளை மாலை 4 மணியளவில் வெளியாகும் என்று அறிவித்துள்ளார்.

A special love song #uyirey is on its way from #Amaran pic.twitter.com/qeirslYgiY

— G.V.Prakash Kumar (@gvprakash) October 29, 2024
Read Entire Article