நாளை முதல் ஆதார் எண்ணை இணைத்தோருக்கு மட்டுமே தட்கல் டிக்கெட்: ரயில்வே தகவல்

1 week ago 4

சென்னை: ஐ.ஆர்.சி.டி.சி.யுடன் ஆதார் எண்ணை இணைத்தோர் மட்டுமே நாளை முதல் தட்கல் டிக்கெட்டை முன்பதிவு செய்ய முடியும் என ரயில்வே அறிவித்துள்ளது. ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் கவுன்டர்கள் மூலம் மட்டுமே தட்கல் டிக்கெட்டை முன்பதிவு செய்ய முடியும். ஆன்லைன் தட்கல் டிக்கெட் முன்பதிவுகளில் வெளிப்படைத் தன்மையை கொண்டுவர ரயில்வே புதிய நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. போலி கணக்குகள் மூலம் தட்கல் டிக்கெட் முன்பதிவை தடுக்கும் வகையில் புதிய முயற்சி மேற்கொண்டுள்ளது.

கவுன்டரில் தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கும் ஆதார் மூலம் ஓடிபி நடைமுறையை ஜூலை 15முதல் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தட்கல் டிக்கெட் சில நிமிடங்களிலேயே விற்று தீர்வதை தடுக்கும் வகையில் ஆதார் எண் இணைப்பு கட்டாயம். சட்டவிரோத செயலி மூலம் ஏஜெண்டுகள் தட்கல் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்வதை தடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஒரு நாளைக்கு சுமார் 2.25 லட்சம் தட்கல் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படுகின்றன.

ரயில் முன்பதிவு பயணிகள் அட்டவணை தயாரிப்பதில் புதிய மாற்றம்
இதனிடையே ரயில் புறப்படுவதற்கு 8 மணி நேரத்திற்கு முன்பே இறுதிப் பயணிகள் அட்டவணையைத் தயாரிக்க ரயில்வே முடிவு செய்துள்ளது. டிக்கெட் உறுதியாகாதவர்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தற்போது 4 மணி நேரத்திற்கு முன்பாக முன்பதிவு பயணிகளின் அட்டவணை தயாரிக்கப்படுகிறது. மேலும், நிமிடத்திற்கு ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான டிக்கெட்டுகளை உருவாக்கும் திறன் கொண்ட புதிய முன்பதிவு அமைப்பை கொண்டு வரவும் திட்டமிடப்பட்டுள்ளது.

The post நாளை முதல் ஆதார் எண்ணை இணைத்தோருக்கு மட்டுமே தட்கல் டிக்கெட்: ரயில்வே தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article