சென்னை: அம்பேத்கர் பிறந்தநாள் அன்று அனைத்து மாவட்ட திமுக அலுவலகங்களிலும் “சமத்துவ நாள்” உறுதிமொழி ஏற்று கொண்டாடிட வேண்டும் என்று திமுக தலைமை கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. ஏப்ரல் 14ம் தேதி (நாளை) சமத்துவ நாளாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும் அம்பேத்கர் பிறந்த நாள் அன்று அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்து, ”சமத்துவநாள் உறுதிமொழி” ஏற்றுக் கொண்டாடப்பட்டு வரப்படுகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட திமுக அலுவலகங்களிலும் அம்பேத்கரின் படத்திற்கு அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், சட்டமன்ற-நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்ட திமுகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தி, சமத்துவ நாள் உறுதிமொழியை ஏற்று, சமத்துவ நாளை கொண்டாட வேண்டுமென திமுக தலைமைக் கழகம் கேட்டுக் கொண்டுள்ளது.
The post நாளை அம்பேத்கர் பிறந்த நாள் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்று கொண்டாட வேண்டும்: திமுக தலைமை கழகம் வேண்டுகோள் appeared first on Dinakaran.