நாலாந்தர பேச்சாளர்கள் போல் ஒன்றிய அமைச்சர்கள் பொறுப்பின்றி பேட்டியளிப்பதா? முத்தரசன் தாக்கு

1 month ago 5

தேன்கனிக்கோட்டை: ஒன்றிய அமைச்சர்கள் பொறுப்பு இல்லாமல், நாலாந்தர பேச்சாளர்கள் போல பேட்டியளிக்கிறார்கள் என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் கூறினார். கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி தாலுகா அலுவலகம் முன்பு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், தளி எம்எல்ஏ ராமச்சந்திரன் தலைமையில், பட்டா வழங்க கோரி காத்திருப்பு போராட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பங்கேற்று, பல ஆண்டுகளாக மக்கள் குடியிருந்து வரும் வீடுகளுக்கு பட்டா வழங்க வேண்டும், வீடு இல்லாதவர்களுக்கு 3 சென்ட் நிலம் வழங்க வேண்டும், வன உரிமை சட்டம் 2006ஐ நடைமுறைப்படுத்த வேண்டும் என பேசினார்.

பின்னர், செய்தியாளர்களிடம் முத்தரசன் கூறுகையில், ‘ஒன்றிய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், அமித்ஷா, தர்மேந்திர பிரதான் மற்றும் பாஜ தலைவர்கள், பொறுப்போடு பேச வேண்டும். எந்த பொறுப்பும் இல்லாமல் தெருவில் போகிற நாலாந்தர பேச்சாளர்கள் போல, பத்திரிகையாளர்களிடம் பேட்டிகளை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அவ்வாறு பேசுவது கண்டனத்திற்குரியது. தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காகவும், தமிழ்நாட்டின் உரிமையை பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவும் தமிழ்நாடு அரசு போராடுகிறது,’ என்றார்.

The post நாலாந்தர பேச்சாளர்கள் போல் ஒன்றிய அமைச்சர்கள் பொறுப்பின்றி பேட்டியளிப்பதா? முத்தரசன் தாக்கு appeared first on Dinakaran.

Read Entire Article