ஸ்டாவஞ்சர்: நார்வே கிளாசிகல் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் அமெரிக்க கிராண்ட் மாஸ்டர் ஹிகாரு நகமுராவிடம், இந்தியாவை சேர்ந்த உலக செஸ் சாம்பியன் குகேஷ் மோசமான தோல்வியை சந்தித்தார். நார்வேயின் ஸ்டாவஞ்சர் நகரில் நார்வே கிளாசிகல் செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றன.
கடைசி இரு போட்டிகளில் இந்தியாவை சேர்ந்த உலக செஸ் சாம்பியன் குகேஷ், நார்வேயை சேர்ந்த உலக நம்பர் 1 வீரர் மேக்னஸ் கார்ல்சன், இந்திய கிராண்ட் மாஸ்டர் அர்ஜுன் எரிகேசியை அடுத்தடுத்து வெற்றி கண்டு வியப்பில் ஆழ்த்தினார். இந்நிலையில், அமெரிக்க வீரர் ஹிகாரு நகமுராவுடன், 8வது சுற்றுப் போட்டியில் குகேஷ் மோதினார். 4 மணி நேரம் நடந்த அப்போட்டியின் துவக்கம் முதல் நகமுராவின் கையே ஓங்கி இருந்தது.
கடைசியில் அபார வெற்றி பெற்ற நகமுராவுக்கு 3 புள்ளிகள் கிடைத்தன. மற்றொரு போட்டியில் அமெரிக்க கிராண்ட் மாஸ்டர் பேபியானோ கரவுனாவை, இந்திய கிராண்ட் மாஸ்டர் எரிகேசி அபாரமாக வென்றார். 8 சுற்றுகள் முடிவில் கரவுனா, 12.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். கார்ல்சன் 12 புள்ளிகளுடன் 2ம் இடத்தை பிடித்துள்ளார். குகேஷ், நகமுரா 11.5 புள்ளிகளுடன் 3ம் இடத்தில் உள்ளனர்.
The post நார்வே கிளாசிகல் செஸ்: ஹிகாரு நகமுராவிடம் குகேஷ் தோல்வி appeared first on Dinakaran.