நாய்கள் கடித்து மான் பலி

3 months ago 9

 

கிணத்துக்கடவு,பிப்.10: கிணத்துக்கடவு அருகே உள்ள கோதவாடியில் சுமார் 400 ஏக்கர் பரப்பளவு கொண்ட குளம் உள்ளது. பொதுப்பணி துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த குளத்தில் 50 மேற்பட்ட மான்கள் வசித்து வருகிறது. இதனை வனத்துறையினர் அவ்வப்போது வந்து கண்காணித்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று காலை, கோதவாடி குளத்தில், காயங்களுடன் மான் ஒன்று உயிரிழந்து கிடப்பதாக நெகமம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

உடனே அவர்கள் இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வனசரகர் ஞானபாலமுருகன் உத்தரவின் பேரில், கோதவாடி குளத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர், இறந்து கிடந்த மானை பார்வையிட்டு, அதன் உடலில் ஏற்பட்டுள்ள காயங்களை ஆய்வு செய்தனர். அதில் நாய்கள் தான் கடித்துள்ளது என்பது உறுதியானது. இதையடுத்து பிரேத பரிசோதனை செய்து அடக்கம் செய்வதற்காக வனத்துறையினர் மானை எடுத்து சென்றனர்.

The post நாய்கள் கடித்து மான் பலி appeared first on Dinakaran.

Read Entire Article