நாய்களுக்கு வெறிநோய் தடுப்புத் திட்ட சிறப்பு முகாம்

2 months ago 7

 

பேரையூர், பிப். 23: சேடபட்டியில் நாய்களுக்கான வெறிநோய் தடுப்புத்திட்ட சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. பேரையூர் தாலுகா, சேடபட்டி கால்நடை மருத்துவமனை வளாகத்தில், நேற்று தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் நாய்களுக்கான வெறிநோய் தடுப்புத் திட்ட முகாம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் சங்கீதா தலைமை தாங்கினார். பேரையூர் தாசில்தார் செல்லப் பாண்டியன் மற்றும் கால்நடைத்துறை அதிகாரிகள் முன்னிலை வகித்தனர்.

முகாமில் நாய் கடிப்பதால் ஏற்படும் வெறிநோயைக்கட்டுப்படுத்த நாய்களுக்கு இலவசமாகத் தடுப்பூசி போடப்பட்டது. மேலும் வீட்டில் வளர்க்கும் மற்றும் தெருநாய்களுக்கும், வெறிநாய் கடியால் பாதிக்கப்பட்ட ஆடு மாடுகளுக்கும், நாய் குட்டிகளை பாதிக்கும் நோய்களுக்கும் இலவச தடுப்பூசிகள் போடப்பட்டது. இந்நிகழ்வில் பங்கேற்ற கால்நடைகள் வளர்ப்போருக்கு தமிழ்நாடு கால்நடை பராமரித்துறை சார்பில் இடுமானப் பொருட்கள், சத்துணவுகள் உள்ளிட்டவற்றை கலெக்டர் சங்கீதா வழங்கினார்.

 

The post நாய்களுக்கு வெறிநோய் தடுப்புத் திட்ட சிறப்பு முகாம் appeared first on Dinakaran.

Read Entire Article