நாம் தமிழர் கட்சியில் இருந்து கடலூர் கிழக்கு மாவட்ட தலைவர் விலகல்

9 hours ago 3

சென்னை,

சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியிலிருந்து அண்மை காலமாக மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள், பொறுப்பாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் விலகி வருகின்றனர். அவ்வாறு விலகுபவர்கள் சீமான் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தே செல்கின்றனர்.

இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியில் இருந்து கடலூர் கிழக்கு மாவட்டத் தலைவர் மகாதேவன் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், " இன விடுதலை அரசியல் என்று இது நாள் வரை நான் பயணித்து வந்த 10 ஆண்டுகளுக்கு மேலான இனிமையான பயணத்தை இன்றோடு முடித்துக்கொள்கிறேன் "இன்றோடு நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுகிறேன்" இது நாள் வரையிலும் உடன் பயணித்த அனைத்து உறவுகளுக்கும் நன்றி" என்று தெரிவித்துள்ளார்.

Read Entire Article