நாமக்கல் அரசு மருத்துவமனையில் தனக்குத்தானே மயக்க ஊசி போட்டு மாணவர் தற்கொலை

4 months ago 13

நாமக்கல்: நாமக்கல் அரசு மருத்துவமனையில், பி பார்ம் மருத்துவ மாணவர் மயக்க ஊசி செலுத்தி தற்ெகாலை செய்து கொண்டார். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரது மகன் சந்தானகோபாலன் (22). நாமக்கல் அருகே உள்ள தனியார் பார்மசி கல்லூரியில், பி.பார்ம் படித்து வந்தார். 4ம் ஆண்டு படிப்பை முடித்த அவர், கடந்த இரு மாதமாக, நாமக்கல் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்தார். நேற்று பயிற்சிக்கு வந்த சந்தானகோபாலன், பெண்கள் உள்நோயாளி பிரிவில் உள்ள மருத்துவர்கள் கழிவறைக்கு சென்றுள்ளார். நீண்ட நேரமாக அவர் வெளியே வராததால், நண்பர்கள் கழிவறைக்கு சென்று கதவை தட்டினர். பதில் வராமல் போகவே சந்தேகம் அடைந்த அவர்கள், கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

அங்கு சந்தானகோபாலன் மயங்கிய நிலையில் கிடந்தார். உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த நல்லிபாளையம் போலீசார் கழிவறைக்கு சென்று பார்த்தனர். அங்கு ஊசி, மருந்து பாட்டில் மற்றும் சிரிஞ்ச் போன்றவை கிடந்தது. மாணவர் அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தும் மயக்க மருந்தை, தனது உடலில் ஊசி மூலம் ஏற்றி, தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்து போலீசார் வழக்குபதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனைக்கு பிறகே, மாணவர் இறப்பிற்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

 

The post நாமக்கல் அரசு மருத்துவமனையில் தனக்குத்தானே மயக்க ஊசி போட்டு மாணவர் தற்கொலை appeared first on Dinakaran.

Read Entire Article