நான்கு நாள் பயணமாக இந்தியா வந்த மாலத்தீவு அதிபர் முய்சு.. பிரதமர் மோடியிடம் நிதி உதவி கேட்க திட்டம்..!

3 months ago 26
நான்கு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள மாலத்தீவு அதிபர் முய்சு இன்று பிரதமர் மோடியை சந்தித்துப் பேசுகிறார். பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள மாலத்தீவின் கடன் சுமையைக் குறைக்க அவர் நிதியுதவி கோரப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக நேற்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்த முய்சு, இருதரப்பு உறவுகளை மேம்படுத்த விரும்புவதாக தெரிவித்தார். அதற்கு வரவேற்பு தெரிவித்த ஜெய்சங்கர் பிரதமர் மோடியுடன் நடத்த உள்ள பேச்சுவார்த்தை இருதரப்பினர் உறவையும் வலுப்படுத்தும் என்று நம்பிக்கை தெரிவித்தார். இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய மாலத்தீவு அதிபர், இந்தியாவுடனான உறவு மாலத்தீவுக்கு முதன்மையானது என்றும், இந்தியாவின் பாதுகாப்புக்கு எதிரான எந்த ஒரு செயலையும் மாலத்தீவு அனுமதிக்காது என்றும் உறுதியளித்துள்ளார்
Read Entire Article