நான் விலக சரியான நேரம் இதுதான் என நினைக்கிறேன் - ஓய்வு குறித்து மனம் திறந்த டிம் சவுதி

2 hours ago 2

வெல்லிங்டன்,

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் டிம் சவுதி (வயது 35). இவர் நியூசிலாந்து அணிக்காக கடந்த 2008ம் ஆண்டு அறிமுகம் ஆனார். இவர் நியூசிலாந்து அணிக்காக 104 டெஸ்ட், 161 ஒருநாள் மற்றும் 125 டி20 போட்டிகளில் ஆடி உள்ளார். மேலும், இவர் 54 ஐ.பி.எல் போட்டிகளிலும் ஆடி உள்ளார்.

நியூசிலாந்து கிரிக்கெட்டின் முன்னணி வீரராக இருக்கும் டிம் சவுதி, இந்த மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருடன் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக இன்று அறிவித்தார்.

இந்நிலையில், தனது ஓய்வு முடிவு குறித்து டிம் சவுதி மனம் திறந்து பேசியுள்ளார். ஐ.சி.சி. நிகழ்ச்சி ஒன்றில் பேசிய டிம் சவுதி இது தொடர்பாக கூறியதாவது, நான் சிறுவயதில் இருந்தே நியூசிலாந்து அணிக்காக விளையாட வேண்டும் என்ற கனவுடன்தான் வளர்ந்தேன். அந்த வகையில் கடந்த 18 ஆண்டுகளாக நியூசிலாந்து அணிக்காக விளையாட வாய்ப்பு கிடைத்தது மிகப்பெரிய கவுரவம் என்று நான் கருதுகிறேன். தற்போது நான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் முடிவை எடுத்துள்ளேன்.

கனத்த இதயத்துடன் இந்த முடிவை எடுத்திருந்தாலும், இதுதான் நான் விலக சரியான நேரம் என்று நினைக்கிறேன். பல ஆண்டு காலமாக எனக்கும் என் குடும்பத்தாருக்கும் உறுதுணையாக இருந்த நண்பர்கள், பயிற்சியாளர்கள், ரசிகர்கள் என அனைவருக்கும் நன்றி உள்ளவனாக இருப்பேன். இந்த கிரிக்கெட் பயணம் எனக்கு நம்ப முடியாத ஒன்றாக இருந்தது. இவ்வாறு அவர் கூறினார். 

Read Entire Article