நான் முதல்வன் திட்டத்தின் கீழ் போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு

3 months ago 17

 

சேலம், அக்.14: தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் போட்டித்தேர்வு பிரிவு மூலம் சென்னை, கோவை, மதுரை ஆகிய மண்டலங்களைச் சேர்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட 1000 மாணவர்களுக்கு உணவு, இருப்பிட வசதியுடன் போட்டித்தேர்வு பயிற்சி அளிக்க, ₹6 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது. அதன்படி, 6 மாதத்திற்கு உணவு, தங்கும் இடவசதியுடன் டிஎன்பிஎஸ்சி, எஸ்எஸ்சி, ரயில்வே, வங்கி உள்ளிட்ட போட்டித்தேர்வு முகமைகள் நடத்தும் தேர்வுகளுக்கு இலவச பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது.

இதுகுறித்து சேலம் மாவட்ட திறன் பயிற்சி உதவி இயக்குநர் ரவிச்சந்திரன் கூறுகையில், ‘நான் முதல்வன் போட்டித்தேர்வு பிரிவின் கீழ், கோவை மண்டலத்தில் உள்ள கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 350 மாணவ, மாணவிகளுக்கு 6 மாதத்திற்கு உணவு மற்றும் தங்கும் வசதியுடன் இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

சேலம் மாவட்டத்தில் உத்தமசோழபுரம் அருகில் உள்ள விஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில், பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. இப்பயிற்சி வகுப்பினை சேலம் கலெக்டர் பிருந்தாதேவி 14ம் தேதி (இன்று) குத்துவிளக்கேற்றி தொடங்கி வைக்க உள்ளார். விழாவிற்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழக நான் முதல்வக் போட்டித்தேர்வுகள் பிரிவு சிறப்பு திட்ட இயக்குநர் சுதாகரன் தலைமை வகிக்கிறார். கட்டணம் செலுத்தி படிக்க இயலாத மாணவ, மாணவிகள், இப்பயிற்சி வகுப்புகள் மூலம் பயன் பெறுவார்கள்,’ என்றார்.

The post நான் முதல்வன் திட்டத்தின் கீழ் போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு appeared first on Dinakaran.

Read Entire Article