நான் பெண்ணாக பிறந்திருந்தால் கமலை கல்யாணம் செய்திருப்பேன் - சிவராஜ்குமார்

1 day ago 3

கன்னட சினிமாவின் முன்னணி நடிகர் சிவராஜ் குமார். தமிழில் ரஜினியின் ஜெயிலர், தனுஷின் கேப்டன் மில்லர் போன்ற படங்களில் நடித்தார். புற்று நோயால் பாதிக்கப்பட்ட இவர் கடந்த ஆண்டு சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று சில மாதங்களுக்கு பிறகு நாடு திரும்பினார். அதையடுத்து மீண்டும் திரைப்படங்களில் நடிப்பதற்காக தன்னை தயார்படுத்திக் கொண்டு வருகிறார். குறிப்பாக, கேம் சேஞ்சர் படத்தை அடுத்து ராம்சரண் நடிக்கும் 16 வது படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேரடி தமிழ்ப் படமொன்றில் நாயகனாக நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய சிவராஜ் குமார், "எனக்கு அமிதாப் பச்சன், கமல்ஹாசன் தான் மிகவும் பிடிக்கும். கமல்ஹாசன் என்றால் அழகு. நான் பெண்ணாக இருந்திருந்தால் நிச்சயமாக அவரை கல்யாணம் பண்ணி இருந்திருப்பேன். இதை நான் பல மேடைகளில் சொல்லி இருக்கிறேன்.ஒருமுறை அவர் வீட்டுக்கு வரப்போ நான் அவரை பார்த்துக்கொண்டே இருந்தேன். யார் இது என்று என் அப்பாவிடம் கமல் சார் கேட்க, என் பையன்தான் என்று சொன்னார். அப்போ கமல் சார் கிட்ட உங்களை ஒரு முறை கட்டிப் பிடித்துக் கொள்ளலாமா என்று கேட்டேன். அவரும் என்னை கட்டிப்பிடித்துக் கொண்டார். மூணு நாள் நான் குளிக்கவே இல்லை. ஏன்னா, அவருடைய ஆரா மற்றும் ஸ்மெல் என் மீது இருக்க வேண்டும் என்று நினைத்தேன். அந்த மாதிரி ஒரு ரசிகன் நான்" என்று தெரிவித்தார்.

மேலும் 'ஜெயிலர் 2' எனது பகுதியின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும், படத்தில் நான் ஒரு சிறிய பாத்திரமாக இருந்தாலும் அதில் ஒரு பகுதியாக இருக்க விரும்புவதாக கூறியுள்ளார்.

Read Entire Article