நாதக வேட்பாளர் மீது வழக்கு: பிரசாரத்துக்கு வந்த 7 பேருடன் காமெடி ஷோ

3 hours ago 2

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி, சின்னம் என்ன என்பது தெரியாத நிலையில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், ஈரோடு மத்திய பேருந்து நிலையத்தில், கட்சி நிர்வாகிகளுடன், அவர் நேற்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, ஈரோடு கிழக்கு தொகுதிக்கு எவ்வித சம்பந்தமில்லாத பவானி, சேலம், பெருந்துறை, சத்தியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகளில் ஏறி, பயணிகளிடம், சீதாலட்சுமி வாக்கு சேகரித்தார்.

அவருடயை செயல் பொதுமக்கள், பயணிகள் மத்தியில் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, வேட்பாளர் சீதாலட்சுமி, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக வாக்கு சேகரிக்கிறாரா? அல்லது 2026ல் நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கு வாக்கு சேகரிக்கிறாரா? என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இதற்கிடையே அனுமதியின்றி பிரசாரத்தில் ஈடுபட்டதால் ஈரோடு மத்திய பேருந்து நிலையத்துக்கு சென்ற போலீசார், நாதக வேட்பாளரிடம் அனுமதி பெற்று பிரசாரத்தில் ஈடுபடுமாறு அறிவுறுத்தினர். ஆனாலும், நாம் தமிழர் கட்சியினர் தொடர்ந்து பிரசாரத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமி மீது, தேர்தல் பிரிவு அதிகாரிகள், ஈரோடு டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதன் அடிப்படையில், சீதாலட்சுமி உட்பட 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே, வஉசி பூங்கா முன்பு உரிய அனுமதியின்றி பிரசாரத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த ஈரோடு கிழக்கு மண்டலச் செயலாளர் நவநீதன் உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

The post நாதக வேட்பாளர் மீது வழக்கு: பிரசாரத்துக்கு வந்த 7 பேருடன் காமெடி ஷோ appeared first on Dinakaran.

Read Entire Article