டெல்லி : ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தேசதுரோகம் செய்துவிட்டதாக ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். 1947-ல் நாடு சுதந்திரம் பெறவில்லை; அயோத்தி ராமர் கோயில் திறக்கப்பட்ட நாளே விடுதலை பெற்ற நாள் என பகவத் பேசியுள்ளார். ராமர் கோயில் திறக்கப்பட்ட நாளையே உண்மையான சுதந்திர தினமாக கொண்டாட வேண்டும் என்றும் பகவத் தெரிவித்துள்ளார். மோகன் பகவத்தின் பேச்சு தேசத்துரோக குற்றமாகும் என்றும் இந்திய சுதந்திரத்தின் சின்னமான அரசியலமைப்பு சட்டத்தை மோகன் பகவத் அவமதித்துவிட்டதாகவும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் நாட்டை ஆட்சி செய்பவர்களுக்கு தேசியக்கொடி மீது மரியாதை இல்லை என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டி உள்ளார்
The post நாட்டை ஆட்சி செய்பவர்களுக்கு தேசியக்கொடி மீது மரியாதை இல்லை : ராகுல் காந்தி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.