நாட்டுப்புற கலைநிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு

4 months ago 35

தர்மபுரி, செப்.29: தர்மபுரி நகர பஸ் ஸ்டாண்டில், திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி, தமிழக அரசின் சாதனைகளை விளக்கி கூறும் விழிப்புணர்வு கிராமிய நாட்டுப்புற கலைநிகழ்ச்சி மூலம் நேற்று நடந்தது. திமுக அரசின் சாதனைகளை, நாட்டுப்புற பாடல்கள் மூலம் கலைக்குழுவினர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சிக்கு தர்மபுரி நகர திமுக செயலாளர் நாட்டான் மாது தலைமை வகித்தார். துணை செயலாளர் முல்லைவேந்தன், மாவட்ட பொருளாளர் தங்கமணி, கலை இலக்கிய பகுத்தறிவு அணி தலைவர் குமார், தேவராஜ், திமுக நகர நிர்வாகிகள் கோல்டன் அன்பு, அழகுவேல், கனகராஜ், சுருளி, காசி, கவுன்சிலர் மாதேஸ்வரன், ஒன்றிய பொருளாளர் தண்டபாணி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post நாட்டுப்புற கலைநிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Read Entire Article