நாட்டில் வேலைவாய்ப்பின்மை 3.2%ஆக குறைந்துள்ளது: மக்களவையில் நிர்மலா சீதாராமன் தகவல்

4 weeks ago 7

டெல்லி: நாட்டில் வேலைவாய்ப்பின்மை 3.2%ஆக குறைந்துள்ளது என ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மக்களவையில் துணை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று உரையாற்றினார். அப்போது பேசிய அவர்; நாட்டில் வேலைவாய்ப்பின்மை 3.2%ஆக குறைந்துள்ளது; 2017-18இல் 6%ஆக இருந்த வேலைவாய்ப்பின்மை விகிதம் தற்போது 3.2% ஆக உள்ளது. மேலும், நாட்டில் உற்பத்தித் துறையில் பரவலாக மந்தநிலை இல்லை. தொடர்ந்து வலுவான வளர்ச்சியை காட்டுகின்றன. அதுபோல பணவீக்கமும் 4.8 சதவீதமாகக் குறைந்துள்ளது.

2024 – 25ம் நிதியாண்டின் ஏப்ரல் – அக்டோபரில் சில்லறை பணவீக்கம் 4.8 சதவீதமாக இருந்தது. கொரோனா தொற்றுநோய் பரவி, பொதுமுடக்கங்களுக்குப் பிறகு, பணவீக்கம் தற்போது மிகவும் குறைந்துள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் பணவீக்கம் சிறப்பாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. 2-வது காலாண்டில் பதிவான குறைவான ஜிடிபி (5.4%) வளர்ச்சி, தற்காலிக வீழ்ச்சியே; வரும் காலாண்டுகளில் பொருளாதாரம் ஆரோக்கியமான வளர்ச்சியைக் காணும். உலகில், மிக விரைவாக வளர்ச்சியடையும் மிகப்பெரிய பொருளாதார நாடாக தொடர்ந்து இந்தியா திகழ்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.

The post நாட்டில் வேலைவாய்ப்பின்மை 3.2%ஆக குறைந்துள்ளது: மக்களவையில் நிர்மலா சீதாராமன் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article