நாட்டின் சில்லறை பணவீக்கம் 6.21 சதவீதமாக உயர்வு - ரிசர்வ் வங்கியின் உச்சவரம்பை தாண்டியது...!

1 week ago 3

டெல்லி,

அக்டோபர் மாதத்திற்கான நாட்டின் சில்லறை வர்த்தக பணவீக்கம் 6.21 சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 5.49 சதவீதமாக இருந்த சில்லறை வர்த்தக பணவீக்கம் அக்டோபர் மாதத்தில் அதிகரித்துள்ளது. இது கடந்த 14 மாதங்களில் இல்லாத பணவீக்க உயர்வாகும்.

சில்லறை வர்த்தக பணவீக்கம் 6.21 சதவீதமாக அதிகரித்துள்ள நிலையில் இது ரிசர்வ் வங்கியால் நிர்ணயிக்கப்பட்ட உச்ச வரம்பான 6 சதவீதத்தை தாண்டியுள்ளது.

அக்டோபர் மாதத்தில் உணவுப்பொருட்கள் மீதான பண வீக்கம் 9.69 சதவீதமாக அதிகரித்துள்ளது. செப்டம்பர் மாதம் 9.24 சதவீதமாக இருந்த உணவுப்பொருட்கள் மீதான பண வீக்கம் தற்போது 9.69 சதவீதமாக அதிகரித்துள்ளது. காய், கனிகள் மற்றும் உணவு பொருட்களின் விலை உயர்வு பண வீக்கத்திற்கு காரணமாக கூறப்படுகிறது.

Read Entire Article