நாடு முழுவதும் 200 போலி நிறுவனங்களை உருவாக்கி ஜிஎஸ்டி மோசடி: குஜராத்தை சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் மகேஷ் லங்கா கைது

3 months ago 21

அகமதாபாத்: நாடு முழுவதும் 200 போலி நிறுவனங்களை உருவாக்கி ஜிஎஸ்டி மோசடியில் ஈடுபட்ட குஜராத்தை சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் மகேஷ் லங்கா உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் போலியான ஆவணங்களை கொண்டு உருவாக்கியுள்ள நிறுவனங்களை ஒலிக்க ஜிஎஸ்டி புலனாய்வு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரசுக்கு கோடி கணக்கில் நஷ்டம் ஏற்படுத்திய நபர்களை பிடிக்க மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கையில் பெரிய அளவில் முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

ஒரே PAN எண்ணை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட 200 போலி நிறுவனங்கள் புலனாய்வு அதிகாரிகளின் விசாரணை வளையத்திற்குள் வந்துள்ளன. இந்த நிறுவனங்கள் போலி உள்ளிட்டு வரி கடன் பெறுவது மற்றும் வழங்குவது போன்ற மோசடி செயல்களில் ஈடுபட்டதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக குஜராத்தின் அகமதாபாத், சூரத் உள்ளிட்ட 14 இடங்களில் ஜிஎஸ்டி புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அகமதாபாத்தில் மூத்த பத்திரிகையாளர் மகேஷ் லங்கா மனைவியிடம் அதிகாரிகள் விசாரணை மோர்கொண்டனர். அப்போது போலி நிறுவனங்கள் அனைத்தையும் தனது கணவரே நிர்வகிப்பதாகவும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அவர் கூறியுள்ளார். அவரது நிறுவனங்களில் நடைபெற்ற சோதனையில் கணக்கில் வராதா ரூ.20 லட்சம் ரொக்கம் மற்றும் சில நில ஆவணங்கள் உள்ளிட்டவற்றையும் கைப்பற்றினர். இதனையடுத்து மகேஷ் லங்கா உள்ளிட்ட 6 பேரை அகமதாபாத் போலீசார் கைது செய்தனர்.

The post நாடு முழுவதும் 200 போலி நிறுவனங்களை உருவாக்கி ஜிஎஸ்டி மோசடி: குஜராத்தை சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் மகேஷ் லங்கா கைது appeared first on Dinakaran.

Read Entire Article