நாடாளுமன்றத்தில் 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' மசோதா இன்று தாக்கல் இல்லை?

4 weeks ago 6

புதுடெல்லி,

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 4-ம் தேதி தொடங்கியது. 20-ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறுகிறது. கூட்டம் தொடங்கியதில் இருந்தே அதானி விவகாரம், சம்பல் வன்முறை, மணிப்பூர் விவகாரம் குறித்து அவையில் விவாதம் நடத்த வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.

இதற்கிடையே, ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை கடந்த 12-ம் தேதி ஒப்புதல் அளித்தது. நாடாளுமன்றத்தில் இந்த மசோதா இன்று (திங்கட்கிழமை) தாக்கல் செய்யப்படும் என தகவல் வெளியாகி இருந்தது.

ஆனால் இந்த மசோதாக்கள் மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்படாது என மத்திய அரசு வட்டாரங்கள் கூறியுள்ளன. மாறாக இந்த வார இறுதியில் தாக்கல் செய்ய அரசு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.மக்களவையின் மாற்றியமைக்கப்பட்ட அலுவல் பட்டியலை மக்களவை செயலகம் வெளியிட்டு இருந்தது. இதில் இன்றைக்கான அலுவல்களில் மேற்படி மசோதாக்கள் இடம்பெறவில்லை.மசோதா தாக்கல் தள்ளிவைக்கப்பட்டதற்கான காரணம் தெரியவில்லை.

Read Entire Article