
நாங்குநேரி தேரடி வீதியில் உள்ள திருவேங்கடமுடையார் கோவில் மிகவும் பழமை வாய்ந்த கோவிலாகும். இந்த கோவில் சிதிலமடைந்த நிலையில் அதை புனரமைத்து கும்பாபிஷேகம் செய்ய நிர்வாகிகள் முடிவு செய்தனர். அதன்படி புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இப்பணிகள் நிறைவடைந்த நிலையில், கடந்த 30-ம் தேதி அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா தொடங்கியது.
தொடர்ந்து யாக சாலை பூஜை, ஹோமம், பூர்ணாஹுதி நடைபெற்றது. யாக சாலை பூஜைகள் நிறைவடைந்த நிலையில், நேற்று காலை காலை 6 மணிக்கு மேல் யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடு நடைபெற்றது. பின்னர் விமான கோபுரம், மூலஸ்தானம், மூல மூர்த்திகளுக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மாலையில் சுவாமி வீதியுலா நடந்தது.