நாகர்கோவில் கிருஷ்ணன்கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

13 hours ago 4


நாகர்கோவில்: நாகர்கோவில் கிருஷ்ணன் கோவில் சித்திரை திருவிழா இன்று காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாகர்கோவில் கிருஷ்ணன்கோவில் சித்திரை திருவிழா இன்று முதல் மே 12ம் தேதி வரை நடக்கிறது. இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. செங்கனூர் தாளமண்மடம் கண்டரரூ மகேஷ்மோகனரூ திருக்கொடியேற்றி வைத்தார். பகல் அன்னதானம், இரவு சுவாமி புஷ்ப வாகனத்தில் எழுந்தருளல், பக்தி மெல்லிசை ஆகியன நடக்கிறது. இரண்டாம் நாளில் மே 4ம் தேதி பகல் அன்னதானம், சுவாமி வாகன பவனி, இரவு கானமேளா நடக்கிறது. 3ம் நாளில் மே 5ம் தேதி காலை சுவாமி எழுந்தருளல், காலை 11க்கு அன்னதானம், இரவு மெல்லிசை கச்சேரி, இரவு சுவாமி எழுந்தருளல் நடக்கிறது. 4ம் திருவிழா மே 6ம் தேதி காலை, மாலை சுவாமி எழுந்தருளல், காலை 11க்கு அன்னதானம், இரவு பட்டிமன்றம் ஆகியன நடக்கிறது.

மே 7ம் தேதி 5ம் திருவிழாவில் காலை, மாலை சுவாமி எழுந்தருளல், காலை 11க்கு அன்னதானம், இரவு இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது. 6ம் நாள் விழாவில் 8ம் தேதி காலை, மாலை சுவாமி எழுந்தருளல், பகல் அன்னதானம், இரவு பக்தி பஜன்ஸ் ஆகியன நடக்கிறது. 7ம் நாள் விழாவில் 9ம் தேதி காலை, மாலை சுவாமி வாகன பவனி, பகல் 11க்கு அன்னதானம், இரவு பரத நாட்டியம், 8ம் நாளில் மே 10ம் தேதி காலை 11க்கு அன்னதானம், காலை, மாலை சுவாமி எழுந்தருளல், இரவு மாணவ மாணவியர் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. 9ம் நாளில் மே 11ம் தேதி காலை 8க்கு திருத்தேர் வடம் தொட்டு இழுத்தல், பகல் 11க்கு அன்னதானம், இரவு 8 சுவாமி பரிவேட்டைக்கு எழுந்தருளல், இரவு 9க்கு சப்தவர்ணம், காமெடி நிகழ்ச்சி நடக்கிறது. 10ம் நாள் விழாவில் மே 12ம் தேதி பகல் 11க்கு அன்னதானம், மாலை 5க்கு சுவாமி ஆராட்டுக்கு எழுந்தருளல், குதிரை பவனி, மாலை 6 ஆராட்டு பூஜை, இரவு மெல்லிசை விருந்து ஆகியன நடக்கிறது.

The post நாகர்கோவில் கிருஷ்ணன்கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் appeared first on Dinakaran.

Read Entire Article