நாகர்கோவிலில் திராவிடர் கழக பொதுக்கூட்டம்

1 month ago 6

நாகர்கோவில், டிச.10: திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியின் 92 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சுங்கான்கடை சந்திப்பில் நடந்தது. மாவட்ட இளைஞரணி தலைவர் அலெக்சாண்டர் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் சுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். செயலாளர் வெற்றிவேந்தன், பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் சிவதாணு, திமுக வட்ட செயலாளர் ராஜேஷ்குமார், குளச்சல் தொகுதி விசிக செயலாளர் சுபாஷ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொறுப்பாளர்கள் விஜி, சுரேஷ்குமார் ஆகியோர் பேசினர். திராவிடர் கழக மாநில சொற்பொழிவாளர் தேவ நர்மதா, திமுக வட்ட பிரதிநிதி பிரில் சேவா, விசிக துணை செயலாளர் ஞானசேகர், திக மாவட்ட துணைத் தலைவர் நல்ல பெருமாள், திராவிடர் கழக காப்பாளர் பிரான்சிஸ், மாநகர தலைவர் கருணாநிதி, செயலாளர் ராஜ சேகர், மாணவரணி அமைப்பாளர் கோகுல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மின்தடை
நாகர்கோவில் மின்வாரிய செயற்பொறியாளர் விடுத்துள்ள அறிக்கை: மீனாட்சிபுரம் துணை மின்நிலையத்தில் வருகிற 12ம் தேதி பராமரிப்பு பணி நடக்கிறது. இதனால் அன்று காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை வடிவீஸ்வரம், கோட்டார், மீனாட்சிபுரம், கணேசபுரம், இடலாக்குடி, ஒழுகினசேரி, தளியபுரம், ராஜபாதை, கரியமாணிக்கபுரம், சவேரியார் ஆலய ஜங்சன், செட்டிக்குளம் சந்திப்பு, சற்குணவீதி, ராமன்புதூர், வெள்ளாளர் காலனி, வேப்பமூடு, ராமவர்மபுரம், ஊட்டுவாழ்மடம், வசந்தம் நகர், மேலகருப்புக்கோட்டை, தேரூர், புதுகிராமம், ஆதலவிளை, ராமபுரம், ஆண்டார்குளம், தேவகுளம், அழகனாபுரம் உள்ளிட்ட இடங்களில் மின்விநியோம் இருக்காது.

The post நாகர்கோவிலில் திராவிடர் கழக பொதுக்கூட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article