நாகநாதர் கோயிலில் விஜயதசமி மண்டகபடி

3 months ago 23

பரமக்குடி,அக்.15: பரமக்குடி தாலுகா நயினார்கோவிலில் ராமநாதபுரம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட  நாகநாதர் சௌந்தரநாயகி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது.தமிழகத்தின் பிரசித்தி பெற்ற ராகுதளம் என்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் சாமியே வணங்குவது தங்களின் வேண்டுதலை நிறைவேற்றுவது வழக்கம். இக்கோவிலில் வருடம் தோறும் விஜயதசமி அன்று நடைபெறும் மண்டகபடி சோழாந்தூர் பாலகிருஷ்ணன், கருப்பூர் திவாகர்,தாழையடிகோட்டை கவுன்சிலர் கரிகாலன் தலைமையில் நடைபெற்றது. இம்மண்டபடியின் சிறப்பு விருந்தினராக ராமநாதபுரம் ராஜா நாகேந்திர சேதுபதி கலந்து கொண்டார்.

நயினார்கோவிலில் இருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் வாகன புறப்பாடு செய்து முருகன் அம்பு எய்தல் போன்று சிறப்பு நிகழ்வு நடைபெற்றது. இதில் பாரனூர் தெய்வேந்திரன், சரவணன், பொட்டகோட்டை தனபாலன்,நாதன் குரூப்ஸ் உரிமையாளர் கணேசன், அக்கிரமசி முன்னாள் விஏஓ நாகலிங்கம், பாண்டியூர் மதுரைவீரன்,காடர்ந்தகுடி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாண்டி,நயினார்கோவில் கவுன்சிலர் மணிமண்ணன், தாழையடிகோட்டை ராஜேந்திரன்,நயினார் கோவில் சோமசுந்தரம்,ஏ பி சி பள்ளி உரிமையாளர் முருகானந்தம்,திருப்புவனம் ஞானசேகரன்,காவனூர் ராஜா உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்து சாமி தர்சனம் செய்தனர்.

The post நாகநாதர் கோயிலில் விஜயதசமி மண்டகபடி appeared first on Dinakaran.

Read Entire Article