சென்னை: தமிழ்நாட்டின் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வரும் 29ம் தேதி வெளியிடப்படும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாஹூ தெரிவித்துள்ளார். இந்தியத் தேர்தல் ஆணையம் 01.01.2025-ஐ தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு சிறப்பு சுருக்க முறை திருத்தம், 2025–ஐ அறிவித்துள்ளது. இது தொடர்பாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாஹூ, அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டத்தை இன்று நடத்தினார்.
இந்தக் கூட்டத்தில், அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தின் போது படிவங்களின் தீர்வு மேற்கொள்ளுதல் மற்றும் அதன் அட்டவணை குறித்து தெரிவிக்கப்பட்டது. இந்திய தேர்தல் ஆணையம் சிறப்பு சுருக்க முறை திருத்தம், 2025-க்கான கீழ்க்கண்ட கால அட்டவணையை அறிவித்துள்ளது.
* தேர்தல் ஆணையத்தின் ஒப்புதல் கோரப்பட்டுள்ளது.
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் வாக்குச் சாவடி நிலை முகவர்களை (BLA) நியமிக்கலாம். அம்முகவர்கள் சிறப்பு சுருக்க முறை திருத்தம், 2025 மற்றும் சிறப்பு முகாம் நாட்களில் வாக்குச் சாவடி நிலை அலுவலர்களுக்கு திருத்தங்கள் மற்றும் பிறவற்றை அடையாளம் காண உதவி செய்யலாம். வாக்குச் சாவடி நிலை முகவர்கள், வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள இறந்த மற்றும் இடம் பெயர்ந்த வாக்காளர்கள் பற்றி வாக்குச் சாவடி நிலை அலுவலர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையத்தின் நிர்ணயிக்கப்பட்ட படிவங்களில் தகவல் வழங்கலாம்.
சிறப்பு சுருக்க முறை திருத்தம், 2025-ன் பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் அட்டவணை தொடர்பாக விளக்கக் காட்சி (Power Point) அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கு, கூட்டத்தின் போது காண்பிக்கப்பட்டது. மேலும், இக்கூட்டத்தில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் தங்களது ஆலோசனை மற்றும் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
The post நவ.16, 17, 23, 24-ம் தேதிகளில் வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்கள் நடைபெறும்: தலைமைத் தேர்தல் அதிகாரி தகவல் appeared first on Dinakaran.