‘நல்லது செய்ய நினைப்பதில்லை...’ - திமுக, அதிமுக மீது உயர் நீதிமன்ற நீதிபதி கடும் அதிருப்தி

3 months ago 15

சென்னை: ‘திமுக, அதிமுக என இரு கட்சியினரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல. தங்களது இருப்பைத் தக்க வைத்துக்கொள்ள மாறி, மாறி குறை கூறுகின்றனர். நாட்டுக்கு நல்லது செய்ய வேண்டும் என இருவரும் நினைப்பதில்லை’ என உயர் நீதிமன்ற நீதிபதி பி.வேல்முருகன் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

மதுரையில் கடந்தாண்டு மே 29-ம் தேதி அதிமுக சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, தமிழக முதல்வரை அவதூறாக பேசியதாக அவருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மதுரை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கு விசாரணையை ரத்து செய்யக் கோரி செல்லூர் ராஜூ சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

Read Entire Article