சென்னை,
தமிழ்நாட்டின் முதுபெரும் பொதுவுடைமைச் சிந்தனையாளரும், விடுதலைப் போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் தலைவருமான தோழர் இரா. நல்லக்கண்ணுவின் 100-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. தமிழ் மக்களுக்கு நல்லக்கண்ணு ஆற்றிய சிறப்பான தொண்டுகளைப் போற்றும்விதமாக, தமிழ்நாடு அரசு 2022-ம் ஆண்டு 'தகைசால் தமிழர்' விருது வழங்கிச் சிறப்பித்தது.
அவருக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கமல்ஹாசன், த.வெ.க தலைவர் விஜய் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
நடிகர் சிவகார்த்திகேயன் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
'இன்று நூறாவது பிறந்தநாள் கொண்டாடும் விடுதலைப்போராட்ட வீரர், ஈடுஇணையற்ற மக்கள் தலைவர் பெருமதிப்பிற்குரிய திரு.நல்லகண்ணு ஐயா அவர்களை நேரில் சந்தித்து எனது அன்பையும் வணக்கங்களையும் தெரிவித்ததில் பெரும் மகிழ்ச்சி'
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.