நம்மூர் சேவல் சண்டையை போன்று ராஜஸ்தானில் வெளிநாட்டு நாய்களை மோதவிட்டு சூதாட்டம்: 81 பேர் கைது; 19 நாய்கள், 15 வாகனங்கள் பறிமுதல்

5 hours ago 3

ஜெய்ப்பூர்: சேவல் சண்டையை போன்று ராஜஸ்தானில் வெளிநாட்டு நாய்களை மோதவிட்டு சூதாட்டம் நடத்திய 81 பேர் கைதான நிலையில், அவர்களிடம் இருந்து 19 வெளிநாட்டு நாய்கள், 15 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ராஜஸ்தான் மாநிலம் ஹனுமன்கர் டவுன் காவல் நிலையப் பகுதியில் இருக்கும் பண்ணை வீட்டில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது வெளிநாட்டு நாய்கள் மீது பணத்தை கட்டி சூதாட்டம் ஆடிய 81 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அங்கிருந்த 19 வெளிநாட்டு இன நாய்களை போலீசார் மீட்டனர். மேலும் அங்கிருந்து 15 வாகனங்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து ஹனுமன்கர் எஸ்.பி அர்ஷத் அலி கூறுகையில், ‘சக் புத்த்சிங் வாலா ரோஹி என்ற பண்ணை வீட்டில் வெளிநாட்டு நாய்களை வைத்து லட்சக்கணக்கில் பணத்தை கட்டி நாய்களை மோதவிட்டு சூதாட்டம் நடத்துவதாக புகார்கள் வந்தது.

அதையடுத்து அங்கு நடத்தப்பட்ட சோதனையில், வெளிநாட்டு இன நாய்களின் மீது பந்தயம் கட்டி பலர் சூதாட்டம் நடத்தினர். அதையடுத்து இந்த சூதாட்டத்தில் ஈடுபட்ட 81 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களின் 15 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போலீஸ் சோதனையால் அங்கிருந்த பலர் சுவரில் ஏறி குதித்து தப்பி ஓடிவிட்டனர். 19 வெளிநாட்டு இன நாய்களும் மீட்கப்பட்டன.

இந்த சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களில் பெரும்பாலோனோர் அண்டை மாநிலமான பஞ்சாப், அரியானாவில் வசிப்பவர்கள் ஆவர். அவர்கள் வெளிநாட்டு நாய்களை தங்களது வாகனங்களில் அழைத்து வந்து சூதாடி உள்ளனர். பண்ணை வீட்டில் மீட்கப்பட்ட வெளிநாட்டு நாய்கள் அனைத்தும் தற்போது போலீஸ் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளன. குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது விலங்குகள் கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் சூதாட்டச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் யாவரும் சமூக ஊடகங்களில் ஒரு குழுவை உருவாக்கி, அதன் மூலம் சூதாட்டத்தை அரங்கேற்றி உள்ளனர்.

இந்த குழுவில் 250 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த நபர்கள் தங்களது குழுவின் மூலம் தகவல் பரிமாற்றம் செய்து கொண்டு, வெவ்வேறு இடங்களில் வௌிநாட்டு நாய்களை வைத்து சூதாட்டம் நடத்துவார்கள். தற்போது அந்த குழுவில் இருக்கும் மற்ற நபர்களை அடையாளம் கண்டு விசாரணை நடத்தி வருகிறோம்’ என்று கூறினார். தமிழ்நாடு, ஆந்திரா போன்ற மாநிலங்களில் நடத்தப்படும் சேவல் சண்டையை போன்று வெளிநாட்டு நாய்களை மோதவிட்டு சூதாட்டம் நடத்தும் விநோத விளையாட்டை ராஜஸ்தானில் சிலர் செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சமூக ஊடகங்களில் ஒரு குழுவை உருவாக்கி, அதன் மூலம் சூதாட்டத்தை அரங்கேற்றி உள்ளனர். இந்த குழுவில் 250 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த நபர்கள் தங்களது குழுவின் மூலம் தகவல் பரிமாற்றம் செய்து கொண்டு, வெவ்வேறு இடங்களில் வௌிநாட்டு நாய்களை வைத்து சூதாட்டம் நடத்துவார்கள்.

The post நம்மூர் சேவல் சண்டையை போன்று ராஜஸ்தானில் வெளிநாட்டு நாய்களை மோதவிட்டு சூதாட்டம்: 81 பேர் கைது; 19 நாய்கள், 15 வாகனங்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Read Entire Article