சென்னை: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனின் தந்தையுமான குமரி ஆனந்தன் காலமானார். அவருக்கு வயது 93.
தன் தந்தையின் மறைவு குறித்து உருக்கமான பதிவு ஒன்றை தமிழிசை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: “தமிழ் கற்றதனால் நான் தமிழ் பேசவில்லை.. தமிழ் என்னைப் பெற்றதனால் நான் தமிழ் பேசுகிறேன் என்று பெருமையாக . பேச வைத்த என் தந்தை குமரி அனந்தன் இன்று என் அம்மாவோடு இரண்டற கலந்து விட்டார். குமரியில் ஒரு கிராமத்தில் பிறந்து தன் முழு முயற்சியினால் அப்பழுக்கற்ற அரசியல்வாதியாக தமிழ் மீது தீராத பற்று கொண்டு. தமிழிசை என்ற பெயர் வைத்து இசை இசை என்று கூப்பிடும் என் அப்பாவின் கணீர் குரல் இன்று காற்றில் இசையோடு கலந்து விட்டது.