நண்பரின் வீட்டில் பார்ட்டி; 7-வது மாடியில் இருந்து விழுந்து மாணவர் உயிரிழப்பு

3 hours ago 3

புதுடெல்லி,

டெல்லி அருகே நொய்டாவில் உள்ள தனியார் சட்டக்கல்லூரியில், காசியாபாத்தை சேர்ந்த தபஸ் என்ற மாணவர் படித்து வந்தார். இவர் செக்டார் 99 பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில், தனது நண்பரின் வீட்டில் நடந்த பார்ட்டியில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக அடுக்குமாடி குடியிருப்பின் 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து மாணவர் தபஸ் உயிரிழந்தார். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்த மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மாணவர் மாடியில் இருந்து தவறி விழுந்ததற்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

Read Entire Article