நட்பு நாடுகள்தான் அதிக வரி விதிக்கின்றன: டிரம்ப் ஆதங்கம்

5 days ago 3

வாஷிங்டன்,

அமெரிக்க பொருட்கள் மீது நாடுகளுக்கு பரஸ்பரம் வரி விதிக்கும் சட்டத்தில் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். அமெரிக்கா மீது வரி விதிக்கும் நாடுகளின் இறக்குமதி வரி பொருட்களுக்கு, அந்த நாடு எவ்வளவு வரியை அமெரிக்க பொருட்கள் மீது விதித்ததோ அதற்கு நிகராக அமெரிக்காவும் இறக்குமதி வரியை விதிக்கும்.

இதற்கான சட்டத்தில் கையெழுத்திட்ட பிறகு பேசிய டொனால்டு டிரம்ப், நட்பு நாடுகளே அமெரிக்கவிற்கு எதிராக இருப்பதாகவும் ஆதங்கம் தெரிவித்தார். இது தொடபாக டிரம்ப் கூறுகையில், இந்தியாவில் வணிகம் செய்ய எலன் மஸ்க் விரும்புகிறார். ஆனால், இந்தியா அதிக வரி விதிக்கிறது. எதிரி நாடுகளை விட நட்பு நாடுகளே அதிக வரி விதிக்கின்றன"என்றார். டிரம்பின் புதிய வரி விதிப்பு அறிவிப்பால் வர்த்தக போர் ஏற்படும் அபாயம் இருப்பதாக சர்வதேச நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக பணவீக்கம் அதிகரிக்கும் என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.

Read Entire Article