நடிகை வனிதா விஜயகுமார் திருமண அழைப்பிதழ்! நிஜ அறிவிப்பா, திரைப்பட விளம்பரமா?

3 months ago 26

சென்னை,

நடிகர் விஜயகுமாரின் மகளான வனிதா விஜயகுமார் நடிகையாக இருக்கிறார். வனிதா விஜயகுமார் கடந்த 1995ம் ஆண்டு வெளியான சந்திரலேகா திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர். அதைத்தொடர்ந்து தேவி, நான் ராஜாவாகப் போகிறேன், அநீதி என பல படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் பிக் பாஸ், குக் வித் கோமாளி போன்ற பல சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் பவர் ஸ்டாருடன் இணைந்து 'பிக்கப் ட்ராப்' படத்தில் நடித்து வருகிறார்.

நடிகை வனிதா விஜயகுமார் 2000ம் ஆண்டு ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்தார். அடுத்தது ஆனந்த் ஜெய் ராயன் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட நிலையில் 2012ம் ஆண்டு விவாகரத்தும் பெற்றுக் கொண்டார். பின்னர் கடந்த 2020ம் ஆண்டு டெக்னீசியனான பீட்டர் பால் என்பவரை மணந்த வனிதா விஜயகுமார் அவரையும் பிரிந்து சென்றார்.

இந்த நிலையில், வனிதா இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் புகைப்படம் ஒன்றை பதிவேற்றினார். அதில் அவரும் ராபர்ட் மாஸ்டரும் இருக்கும் புகைப்படத்தில் அக்டோபர் 5ம் தேதியைக் குறித்துக்கொள்ளுங்கள் என குறிப்பிட்டிருந்தது.

இது திருமண அழைப்பிதழ்போல் உள்ளதால் மீண்டும் வனிதாவுக்குத் திருமணம் என செய்திகள் வெளியாகின. ஆனால், அவரும் ராபர்ட்டும் இணைந்து நடிக்கும் படத்திற்கான புரமோஷன் போஸ்டர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Read Entire Article