
சென்னை,
தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வரும் பூஜா ஹெக்டே, தமிழில் 'முகமூடி' படம் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் விஜய்க்கு ஜோடியாக 'பீஸ்ட்' படத்தில் நடித்து பிரபலமானார். தற்போது சூர்யாவுக்கு ஜோடியாக 'ரெட்ரோ' படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இப்படம் மே 1-ம் தேதி வெளியாகிறது.
இதனைத்தொடர்ந்து, விஜய்யுடன் 'ஜனநாயகன்' படத்தில் பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இப்படம் வரும் அக்டோபர் மாதம் வெளியாகிறது.
இதுமட்டுமில்லாமல், சமூகவலைதளங்களிலும் ஆக்டிவாக இருப்பவர் பூஜா ஹெக்டே. இந்நிலையில், இவர் தற்போது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள செல்பி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் உள்ளனர்.