நடிகை சோனா வீட்டின் சுவர் ஏறி குதித்து திருட முயன்ற 2 இளைஞர்கள் கைது

6 months ago 34
சென்னை, மதுரவாயலில் நடிகை சோனா வீட்டின் சுவர் ஏறி குதித்து அவரை கத்தியைக் காட்டி மிரட்டிய புகாரில் இரண்டு இளைஞர்களை சிசிடிவி பதிவுகளை கொண்டு போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணா நகரில் வசிக்கும் தமது வீட்டின் மதில்சுவர் ஏறி உள்ளே குதித்த 2 இளைஞர்கள் ஏசி யூனிட்டை திருட முயற்சித்ததாகவும், அதனைக் கண்டு வெளியே வந்த தம்மை கத்தியைக் காட்டி மிரட்டியதாகவும் சோனா தெரிவித்திருந்தார். மதுகுடிக்க பணம் தேவைப்பட்டதால் திருட வந்ததாகவும், அது நடிகையின் வீடு என தெரியாது என்றும் கைதான லோகேஷ் மற்றும் சிவா வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
Read Entire Article