'நடிகை சவுந்தர்யாவின் மரணம் விபத்தல்ல' - சிட்டிமல்லு என்பவரின் புகாரால் பரபரப்பு

6 hours ago 2

ஐதராபாத்,

தென்னிந்திய சினிமாவில் 90-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சவுந்தர்யா. இவர் கடந்த 2004-ம் ஆண்டு ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். இந்நிலையில், சவுந்தர்யாவின் மரணம் விபத்தல்ல என்று ஆந்திராவை சேர்ந்த சிட்டிமல்லு என்பவர் காவல் நிலையத்திலும், மாவட்ட ஆட்சியரிடமும் புகார் மனு அளித்திருக்கிரார்.

அந்த மனுவில், 'நடிகை சவுந்தர்யாவின் மரணம் விபத்தல்ல. சவுந்தர்யாவுக்கு ஜல்பள்ளி கிராமத்தில் 6 ஏக்கர் நிலம் இருக்கிறது. அந்த நிலத்தை வாங்க மோகன் பாபு முயற்சித்திருக்கிறார். ஆனால் அந்த நிலத்தை விற்பனை செய்ய சவுந்தர்யாவின் சகோதரர் அமர்நாத் மறுத்திருக்கிறார்.

இந்த நிலையில் சவுந்தர்யாவின் மரணத்திற்கு பிறகும் அந்த நிலத்தை விற்பனை செய்யுமாறு அமர்நாத்திற்கு அழுத்தம் கொடுத்த மோகன் பாபு அந்த நிலத்தில் சட்டவிரோதமாக ஆக்கிரமித்திருக்கிறார். எனவே இந்த நிலத்தை மீட்டு ஆதரவற்றோர், ராணுவத்தினர் ஆகியோரின் நலனுக்கு வழங்க வேண்டும்' என்று  குறிப்பிட்டிருக்கிறார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LIVE : "நடிகை செளந்தர்யாவின் மரணம் விபத்தல்ல!" https://t.co/fS8jRRv5IH

— Thanthi TV (@ThanthiTV) March 12, 2025
Read Entire Article