நடிகை கஸ்தூரியை தீவிரவாதிபோல் நடத்துவதா? - தமிழிசை கண்டனம்

3 hours ago 1

சென்னை,

வ.உ.சிதம்பரனாரின் 88-வது நினைவு தினத்தையொட்டி, சென்னை கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு, தமிழக பா.ஜனதா முன்னாள் தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தின் வளர்ச்சியில் மத்திய அரசு அக்கறை கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. சென்னையில் நிதிக்குழு கூட்டம் நடைபெறுகிறது. இதில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பல கோரிக்கைகளை வைத்துள்ளார். முந்தைய, தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைவிட, பா.ஜனதா ஆட்சியில் தமிழகத்துக்கான நிதி பகிர்வு அதிகரித்துள்ளது. திருமாவளவன் பூரண மதுவிலக்கு வேண்டும், டாஸ்மாக் கடைகள் மூடப்பட வேண்டும் என்று மாநாடு நடத்தினார். அந்த கோரிக்கையை முதல்-அமைச்சர் எப்போது நிறைவேற்ற போகிறார். நடிகை கஸ்தூரி தன்னுடைய கருத்துக்கு மன்னிப்பு கேட்டுவிட்டார். ஆனால், அவரை தீவிரவாதி போல் போலீசார் நடத்துவது சரியான நடவடிக்கை அல்ல. இது பாரபட்சமான நடவடிக்கை.

இவ்வாறு அவர் கூறினார். 

Read Entire Article