நடிகர்கள் வெங்கடேஷ் மற்றும் ராணா டகுபதி மீது வழக்குப்பதிவு

4 months ago 15

சென்னை,

பிரபல தெலுங்கு நடிகர்களான வெங்கடேஷ், ராணா டகுபதி ஆகியோரின் குடும்பத்திற்குச் சொந்தமான நிலம் ஐதராபாத் பிலிம் நகரில் உள்ளது. இந்த இடத்தை நந்தகுமார் என்பவருக்கு ஒப்பந்த அடிப்படையில் வழங்கியிருந்த நிலையில், அதில், டெக்கான் கிச்சன் என்ற பெயரில் நந்தகுமார் உணவகம் நடத்தி வந்தார்.

இந்த இடத்தின் ஒப்பந்தம் தொடர்பான வழக்கு ஒன்று நிலுவையில் இருக்கும் நிலையில், அந்த உணவகத்தை நடிகர் வெங்கடேஷின் குடும்பத்தினர் சட்டவிரோதமாக இடித்ததாக குற்றம்சாட்டிய நந்தகுமார், இதனால் தனக்கு ரூ. 20 கோடி நஷ்டம் ஏற்பட்டதாகவும், வெங்கடேஷ், ராணா உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் வழக்கு தொடர்ந்தார்.

இதனையடுத்து, இது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க கோர்ட்டு உத்தரவிட்டிருந்த நிலையில், நடிகர் வெங்கடேஷ், ராணா டகுபதி உள்ளிட்டோர் மீது பிலிம் நகர் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Read Entire Article