நடிகர் விஜய்யுடன் 'அமரன்' படத்தின் இயக்குனர் சந்திப்பு

7 months ago 26

சென்னை,

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படம் 'அமரன்'. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். தீபாவளி பண்டிகையில் வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரித்துள்ளது.மறைந்த முன்னாள் ராணுவ வீரர் மேஜர் முகுந்தின் வாழ்க்கையைத் தழுவி இப்படம் உருவாகியுள்ளது. இதில் சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்தாகவும், முகுந்தின் மனைவி இந்துவாக சாய் பல்லவி நடித்துள்ளனர். இப்படத்தில் இடம்பெற்ற சண்டை மற்றும் காதல் காட்சிகள் ரசிகர்களைக் கவர்ந்துள்ளன. மேலும், ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பால் இப்படம் உலகளவில் ரூ.300 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.கடந்த தீபாவளி பண்டிகையில் வெளியான இப்படம், தற்போது வரை திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தாண்டு வெளியான படங்களில் அதிகம் வசூலித்த படங்களில் இந்த படமும் ஒன்றாகும்.

இந்த நிலையில், நடிகர் விஜய்யை அமரன் படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இன்று சந்தித்துள்ளார். அமரன் படத்திற்காக ராஜ்குமார் பெரியசாமியை விஜய் பாராட்டியுள்ளார். இது தொடர்பாக ராஜ்குமார் பெரியசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

நன்றி விஜய் சார். உங்களுக்காக தினமும் பிரார்த்தனை செய்கிறேன்.   கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார் . என தெரிவித்துள்ளார் . 

Read Entire Article