நடிகர் விஜய்யின் த.வெ.க ஒரு குட்டி திராவிட கட்சியைப் போலத்தான் இருக்கிறது: தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்

5 months ago 38
சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தெலுங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், நடிகர் விஜய்யின் த.வெ.க ஒரு குட்டி திராவிட கட்சியைப் போல் தான் செயல்படுவதாகக் கூறினார். சாமியையும் கும்பிட்டு, பெரியாரையும் கும்பிட்டு, திமுகவை போல் விஜய் கட்சியும் இரட்டை வேடம் போடுகிறது என்றார். இந்து மதத்தில் தீவிரமாக இருந்த காந்தியின் கொள்கைகள் பிடிக்காது என திருமாவளவன் பேசியதாகக் குறிப்பிட்ட தமிழிசை சௌந்தரராஜன், திருமாவே இந்து நம்பிக்கை உள்ளவர்தான் என்றார். நிறைந்த அமாவாசை நாள் என்பதால்தான் அக்டோபர் 2ஆம் நாளில் திருமாவளவன் மாநாடு நடத்தினார் என்றும் தமிழிசை கூறினார்.
Read Entire Article